< Back
தேசிய செய்திகள்
டெல்லியில் கடும் குளிர்.. இயல்பை விட குறைந்து காணப்படும் வெப்பநிலை
தேசிய செய்திகள்

டெல்லியில் கடும் குளிர்.. இயல்பை விட குறைந்து காணப்படும் வெப்பநிலை

தினத்தந்தி
|
25 Dec 2022 10:31 PM IST

தலைநகர் டெல்லியில் கடும் குளிர் நிலவி வருகிறது.

புதுடெல்லி,

டெல்லியின் ஒருசில பகுதிகளில் இன்று குளிர் அலை வீசியதுடன், ரிட்ஜ் பகுதியில் குறைந்தபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸாக குறைந்துள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்திய வானைலை மையத்தின் கூற்றுப்படி, தலைநகரில் ஒரு சில இடங்களில் கடும் குளிர் நிலவியது. டெல்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை 5.3 டிகிரி செல்சியசாகவும், அதிகபட்ச வெப்பநிலை 16.2 டிகிரி செல்சியசாகவும் பதிவாகியுள்ளது.

ரிட்ஜ் பகுதியில் வெப்பநிலையானது 3 டிகிரி செல்சியஸாக குறைந்தது. இது இயல்பை விட 4.9 டிகிரி செல்சியஸ் குறைந்து, தலைநகரில் மிகவும் குளிரான இடமாக மாறியது.

டெல்லியில் அடுத்த சில நாட்களுக்கு இந்தப் பகுதிகளில் பனிமூட்டமான நிலை நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்