< Back
தேசிய செய்திகள்
காஷ்மீரில் வாகனத்தில் திடீர் வெடிவிபத்து:  8 தொழிலாளர்கள் காயம்; பயங்கரவாத தாக்குதலா..?
தேசிய செய்திகள்

காஷ்மீரில் வாகனத்தில் திடீர் வெடிவிபத்து: 8 தொழிலாளர்கள் காயம்; பயங்கரவாத தாக்குதலா..?

தினத்தந்தி
|
27 Sept 2023 12:42 PM IST

ஜம்மு மற்றும் காஷ்மீரில் அனந்த்நாக் மாவட்டத்தில் வாகனம் ஒன்றில் திடீரென வெடிவிபத்து நடந்ததில் 8 தொழிலாளர்கள் காயமடைந்து உள்ளனர்.

ஜம்மு,

ஜம்மு மற்றும் காஷ்மீரில் அனந்த்நாக் மாவட்டத்தில் டோரு நகரில் லர்கிபோரா என்ற இடத்தில் வாகனம் ஒன்றில் திடீரென வெடிவிபத்து நடந்தது. அந்த வாகனம் சிமெண்ட் கலவைக்கான இயந்திரம் ஆகும். இதனையடுத்து, ஜெனரேட்டர் மற்றும் எண்ணெய் கேன் ஆகியவை இருந்துள்ளது.

இதனருகே தொழிலாளர்கள் வேலை செய்து வந்துள்ளனர். இந்நிலையில், திடீரென வெடிவிபத்து நடந்ததும், தொழிலாளர்கள் பலர் சிக்கி கொண்டனர். இதுவரை 8 பேர் காயமடைந்து உள்ளனர். அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர். அவர்களின் நிலை சீராக உள்ளது.

இந்த வெடிவிபத்து சம்பவம் நடந்த பகுதியருகே உள்ளூர் சந்தையும் உள்ளது. இந்த சத்தம் கேட்டதும் அருகே வசித்து வந்த குடியிருப்புவாசிகள் அச்சமடைந்தனர்.

இதில் பயங்கரவாத தாக்குதல் எதுவும் நடந்ததற்கான அறிகுறிகள் காணப்படவில்லை என்றும் இதுபற்றி விசாரிக்கப்பட்டு வருகிறது என்றும் ஜம்மு மற்றும் காஷ்மீர் போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்