< Back
தேசிய செய்திகள்
வீரசாவர்க்கர் பேனர் விவகாரம்: சிவமொக்கா நகரில் 144 தடை உத்தரவு நீட்டிப்பு
தேசிய செய்திகள்

வீரசாவர்க்கர் பேனர் விவகாரம்: சிவமொக்கா நகரில் 144 தடை உத்தரவு நீட்டிப்பு

தினத்தந்தி
|
24 Aug 2022 12:28 AM GMT

வீரசாவர்க்கர் பேனர் விவகாரம் தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

சிவமொக்கா,

சிவமொக்கா டவுன் ஏ.ஏ.சதுக்கத்தில் சுதந்திர தினவிழா கொண்டாட்டத்தில் வைக்கப்பட்டிருந்த வீரசாவர்க்கர் பேனர் அகற்றப்பட்டது. இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் சிலருக்கு கத்திக்குத்து காயம் ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த மோதலை தடுக்க போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் தொடர்ந்து பதற்றம் நிலவியதால் சிவமொக்கா நகரில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது. நேற்று காலை 6 மணியுடன் 144 தடை உத்தரவு முடிந்தது.

இந்த நிலையில் சிவமொக்கா நகரில் 144 தடை உத்தரவை நீட்டித்து கலெக்டர் செல்வமணி உத்தரவிட்டுள்ளார். அதாவது நேற்று முதல் வருகிற 26-ந்தேதி காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் விநாயகர் சிலைகளை பொதுஇடத்தில் வைக்கும்போது பேனர் வைக்ககூடாது என்றும் தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்