< Back
தேசிய செய்திகள்
வந்தேபாரத் ரெயில், பொருளாதார நடவடிக்கைகளை ஊக்குவிக்கும்; பிரதமர் மோடி கருத்து
தேசிய செய்திகள்

வந்தேபாரத் ரெயில், பொருளாதார நடவடிக்கைகளை ஊக்குவிக்கும்; பிரதமர் மோடி கருத்து

தினத்தந்தி
|
12 Nov 2022 12:15 AM IST

வந்தேபாரத் ரெயில், பொருளாதார நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

பெங்களூரு:

பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

சென்னை-மைசூரு வந்தேபாரத் ரெயில் சேவையை இன்று (நேற்று) காலை பெங்களூருவில் தொடங்கி வைத்தேன். இது இரு நகரங்களுக்கு இடையே தொடர்பு வசதிகளை மேம்படுத்தும். அத்துடன் பொருளாதார நடவடிக்கைகளை ஊக்குவிக்கும். இது மேலும் மக்களின் வாழ்க்கையை எளிமையாக்கும். இந்த ரெயில் சேவையை தொடங்கி வைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது.

இவ்வாறு மோடி குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்