சமத்துவ சமுதாயத்தை வள்ளலார் விரும்பினார் - பிரதமர் மோடி பேச்சு
|சமத்துவ சமுதாயத்தை வள்ளலார் விரும்பினார் என்று பிரதமர் மோடி கூறினார்.
புதுடெல்லி,
வள்ளலாரின் 200-வது பிறந்தநாளையொட்டி சென்னை கவர்னர் மாளிகையில் நடந்த விழாவில் காணொலி காட்சி மூலமாக பிரதமர் மோடி பேசியதாவது:-
சமத்துவ சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என வள்ளலார் விரும்பினார். தமிழ், சமஸ்கிருதம், ஆங்கிலம் ஆகியவற்றில் இளைஞர்கள் புலமை பெற வேண்டும் என வள்ளலார் விரும்பினார். வள்ளலார் இன்று இருந்திருந்தால் மகளிர் இடஒதுக்கீடு சட்டத்தை நிச்சயம் பாராட்டியிருப்பார்.
வள்ளலாரின் ஆன்மீக கருத்துகள் இன்றும், உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களுக்கு உத்வேகம் அளிக்கிறது. அவர் சக மனிதர்கள் மீதான கருணையை வலியுறுத்தி ஜீவகாருண்யத்தை அடிப்படையாகக் கொண்ட வாழ்க்கை முறையில் நம்பிக்கை கொண்டிருந்தார்.
இந்த உலகத்தில் உள்ள ஒவ்வொரு அணுவிலும் கடவுளின் அம்சத்தை கண்டவர் வள்ளலார். வள்ளலாரின் போதனைகள் அனைவரது வளர்ச்சிக்காகவும், சமத்துவ சமுதாயத்தை வலியுறுத்துவதாகவும் இருந்தது.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.