காதலர் தினத்தில் உச்சம் தொட்ட ரோஜா பூக்கள் விலை
|ரோஜா மலரை கொடுத்து தங்களது காதலை சொல்லும் வழக்கம் காதலர்களிடம் இருந்து வருகிறது.
டெல்லி,
உலகமெங்கும் இன்று (பிப்ரவரி 14) காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இன்றைய தினத்தில் காதலர்கள், ஒருவருக்கு ஒருவர் பரிசு பொருட்களை வழங்கி தங்களது அன்பை பகிர்ந்து கொள்வது வழக்கம்.
அவ்வாறு வழங்கும் பரிசுப் பொருட்களை தங்களது வாழ்நாளில் ஒரு நினைவு பொக்கிஷமாக பாதுகாத்து வைத்துக்கொள்ளும் காதலர்களும் உண்டு. காதலர் தினத்தன்று ரோஜா மலரை கொடுத்து தங்களது காதலை முதன் முதலாக சொல்லும் காதலர்களும் இருக்கிறார்கள். அந்த வகையில் காதலில் ரோஜா மலர்கள் முதலிடம் பிடிக்கின்றன.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு ரோஜா பூ ரூ.10-க்கு விற்பனை ஆனது. இந்நிலையில் காதலர் தினமான இன்று ரோஜா பூக்கள் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. அதன்படி, சந்தையில் ஒரு ரோஜாப்பூ ரூ.30 முதல் ரூ.50 வரையில் விற்பனை செய்யப்பட்டது. விலை அதிகமாக உள்ளபோதும் ரோஜாப்பூவை வாங்குவதில் காதலர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.