< Back
தேசிய செய்திகள்
இந்தியாவின் முன்னேற்றத்தை அதிகரிப்பதில் வாஜ்பாய் முக்கிய பங்கு வகித்தார் - பிரதமர் மோடி
தேசிய செய்திகள்

'இந்தியாவின் முன்னேற்றத்தை அதிகரிப்பதில் வாஜ்பாய் முக்கிய பங்கு வகித்தார்' - பிரதமர் மோடி

தினத்தந்தி
|
17 Aug 2023 5:45 AM IST

வாஜ்பாய் தலைமையால் இந்தியா பெரிதும் பலன் அடைந்துள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 5-வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, டெல்லியில் உள்ள வாஜ்பாய் நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர் அஞ்சலி செலுத்தினார். ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், மத்திய மந்திரிகள் மற்றும் பல்வேறு கட்சி தலைவர்களும் அஞ்சலி செலுத்தினர்.

பின்னர், பிரதமர் மோடி தனது 'டுவிட்டர்' பக்கத்தில் வாஜ்பாய்க்கு புகழஞ்சலி செலுத்தினார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

"இந்தியாவின் முன்னேற்றத்தை அதிகரிப்பதில் வாஜ்பாய் முக்கிய பங்கு வகித்தார். இந்தியாவை 21-வது நூற்றாண்டுக்கு அழைத்துச் சென்றார். அவரது தலைமையால் இந்தியா பெரிதும் பலன் அடைந்துள்ளது. 140 கோடி மக்களுடன் இணைந்து, வாஜ்பாய்க்கு அவரது நினைவு தினத்தில் அஞ்சலி செலுத்துகிறேன்."

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்