< Back
தேசிய செய்திகள்
உத்தரகாண்ட் பனிச்சரிவு: இதுவரை 19 பேர் சடலமாக மீட்பு - ஹெலிகாப்டர் மூலம் உடல்களை கொண்டு வர முயற்சி!
தேசிய செய்திகள்

உத்தரகாண்ட் பனிச்சரிவு: இதுவரை 19 பேர் சடலமாக மீட்பு - ஹெலிகாப்டர் மூலம் உடல்களை கொண்டு வர முயற்சி!

தினத்தந்தி
|
7 Oct 2022 3:11 AM GMT

உத்தரகாசியில் மொத்தம் 30 குழுக்கள் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

டேராடூன்,

உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசி மாவட்டத்தில் நேரு மலையேற்ற பயிற்சி நிலையம் உள்ளது. அங்கு பயிற்சி பெறுபவர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் அடங்கிய 41 பேர் கொண்ட குழு, அதே மாவட்டத்தில் உள்ள திரவுபதி கா தண்டா மலைச்சிகரத்தில் ஏறியது.

கடந்த செவ்வாய்க்கிழமை காலை, அங்கிருந்து திரும்பியபோது, 17 ஆயிரம் அடி உயரத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கிக் கொண்டனர். இதில், மலையேற்றத்தில் தேசிய சாதனை படைத்த வீராங்கனை உள்பட 10 பேர் உயிரிழந்தனர்.

இந்த நிலையில், நேற்று நடந்த மீட்புப்பணியின்போது, மேலும் 19 உடல்கள் மீட்கப்பட்டன. இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 22 ஆக உயர்ந்தது. இன்னும் 10க்கும் மேற்பட்டவர்களை காணவில்லை. அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மீட்புப்பனி குறித்து இன்று உத்தரகாண்ட் போலீஸ் டிஜிபி அசோக் குமார் கூறுகையில், "பனிச்சரிவு நடந்த பகுதிகளில் இருந்து மொத்தம் 19 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேம்பட்ட இலகுரக ஹெலிகாப்டர் மூலம் உடல்களை மாட்லி ஹெலிபேடிற்கு கொண்டு வருவதற்கான முயற்சிகள் இன்று மேற்கொள்ளப்படும்.

மொத்தம் 30 மீட்புக் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. நேரு மலையேறுதல் நிறுவனத்தினர், இந்தோ-தீபெத் எல்லைப்பாதுகாப்பு படையினர், தேசிய, மாநில பேரிடர் மீட்புக்குழுவினர், இந்திய விமானப்படையினர் என பல குழுக்கள் பனிச்சரிவில் சிக்கியவர்களை மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன" என்றார்.

உத்தரகாண்ட் பனிச்சரிவில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் நடவடிக்கைகளுக்கு உதவ குல்மார்க்கிலிருந்து நிபுணர் குழு விரைந்துள்ளது. உத்தரகாசியில் உள்ள மாட்லி ஹெலிபேடில் மீட்புப் பணியைத் தொடங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

மேலும் செய்திகள்