< Back
தேசிய செய்திகள்
உத்தராகண்ட் சுரங்க விபத்து: தொழிலாளர்களை மீட்க  இன்னும் 2 நாட்கள் ஆகக் கூடும்: அதிகாரிகள் தகவல்
தேசிய செய்திகள்

உத்தராகண்ட் சுரங்க விபத்து: தொழிலாளர்களை மீட்க இன்னும் 2 நாட்கள் ஆகக் கூடும்: அதிகாரிகள் தகவல்

தினத்தந்தி
|
13 Nov 2023 3:20 PM GMT

சுரங்கப்பாதை இடிந்து விழுந்ததில் 40 தொழிலாளர்கள் உள்ளே சிக்கிக் கொண்ட நிலையில், அவர்களுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளதாக மீட்புக் குழு தெரிவித்துள்ளது..

டேராடூன்,

உத்தராகண்ட் மாநிலம் யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கம் தோண்டும் பணியின்போது விபத்து ஏற்பட்டது. 4.5 கி.மீ. நீளமுள்ள இந்த சுரங்கப் பாதையில் 200 மீட்டர் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. சுரங்கப்பாதை இடிந்து விழுந்ததில் 40 தொழிலாளர்கள் உள்ளே சிக்கிக் கொண்டனர். அவர்களை மீட்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இதுவரை 21 மீட்டர் அளவிலான இடிபாடுகள் அகற்றப்பட்டுள்ளன. இன்னும் 35 மீட்டர் அளவுக்கு இடிபாடுகளை அகற்ற வேண்டியுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். சுரங்கப்பாதை இடிந்து விழுந்ததில் 40 தொழிலாளர்கள் உள்ளே சிக்கிக் கொண்ட நிலையில், அவர்களுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளதாக மீட்புக் குழு தெரிவித்துள்ளது.. தொழிலாளர்கள் பத்திரமாக உள்ளதாகவும் அவர்களுக்கு தேவையான ஆக்சிஜன், உணவு அனுப்பப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ள அதிகாரிகள் மீட்பு பணிகள் முடிய இன்னும் 2 நாட்கள் ஆகும் எனத் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்