< Back
தேசிய செய்திகள்
உத்தரகாண்ட் பனிச்சரிவில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல்

கோப்புப்படம்

தேசிய செய்திகள்

உத்தரகாண்ட் பனிச்சரிவில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல்

தினத்தந்தி
|
5 Oct 2022 1:30 AM IST

உத்தரகாண்ட் பனிச்சரிவில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசி மாவட்டத்தில் நேரு மலையேறுதல் நிறுவனம் என்ற அரசு மலையேறுதல் கல்வி பயிற்சி நிறுவனம் உள்ளது. இந்த பயிற்சி நிறுவனத்தை 34 பயிற்சி மலையேறு வீரர்கள் மற்றும் 7 பயிற்சியாளர்கள் என மொத்தம் 41 உத்தர்காசியில் உள்ள இமயமலையின் திரவுபதி கா கண்டா - 2 சிகரத்தில் இருந்து பயிற்சியை முடித்துக்கொண்டு முகாமிற்கு திரும்பிக்கொண்டிருந்தனர்.

அப்போது, மலைச்சிகரத்தின் 16 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து முகாமிற்கு திரும்பிக்கொண்டிருந்தபோது திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது. இந்த பனிச்சரிவில் மலையேற்ற வீரர்கள் அனைவரும் சிக்கிக்கொண்டனர். தகவலறிந்த இந்தோ-தீபெத் எல்லைப்பாதுகாப்பு படையினர், தேசிய, மாநில பேரிடர் மீட்புக்குழுவினர் பனிச்சரிவில் சிக்கியவர்களை மீட்டும் பணியில் களமிறங்கினர்.

மீட்பு பணியின் போது பனிச்சரிவில் சிக்கிய பலர் உயிருடன் மீட்கப்பட்டனர். ஆனால், இந்த பனிச்சரிவில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 28 பேர் இன்னும் பனிச்சரிவில் சிக்கியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பனிச்சரிவில் சிக்கிய எஞ்சியோரை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் உத்தரகாண்ட் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், "உத்தர்காசியில் மலையேற்ற வீரர்களின் விலைமதிப்பற்ற உயிர்களை இழந்துள்ளோம் என்பது வருத்தமளிக்கிறது. உயிரிழந்த குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். மீட்புப் பணிகளை அதிகாரிகள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர்" என்று அதில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்