< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
உத்தரகாண்ட் சட்டசபை 26-ம் தேதி கூடுகிறது
|21 Feb 2024 7:59 AM IST
வருகிற 26-ந்தேதி காலை 11 மணிக்கு இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டேராடூன்,
உத்தரகாண்ட் சட்டமன்றத்தின் 2024-ம் ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் வருகிற 26-ந்தேதி கூடுகிறது. இது தொடர்பாக விதான் சபா செயலாளர் ஹேம் சந்திர பந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "2024-ம் ஆண்டின் முதல் கூட்டத்தொடர், பிப்ரவரி 26-ந்தேதி காலை 11 மணிக்கு டேராடூனில் உள்ள விதான் சபா பவனில் தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடரில் பங்கேற்க கவர்னருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக சிறப்பு 4 நாட்கள் கூட்டத்தொடர் கடந்த 5-ந்தேதி தொடங்கி நடைபெற்றது. அப்போது இரண்டு நாள் விவாதத்திற்குப் பிறகு 7-ந்தேதி நடைபெற்ற சிறப்பு அமர்வின்போது, உத்தரகாண்ட் சட்டமன்றத்தில் பொது சிவில் சட்ட மசோதா பெரும்பான்மையுடன் நிறைவேறியது குறிப்பிடத்தக்கது.