< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
ஆங்கில மருத்துவ டாக்டர்களுக்கு 6 நாள் ஆயுர்வேத பயிற்சி - உத்தரகாண்ட் அரசு
|12 March 2023 12:30 AM IST
உத்தரகாண்டில் ஆங்கில மருத்துவ டாக்டர்களுக்கு 6 நாட்கள் ஆயுர்வேத பயிற்சி அளிக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக அந்த மாநில தலைமைச் செயலாளர் எஸ்.எஸ்.சாந்து நேற்று கூறுகையில், 'ஆயுஷ் துறையின் சார்பில் நடத்தப்படும் இந்த பயிற்சி, ஆயுர்வேத உண்மைகள், ஆவணங்களை அடிப்படையாக கொண்டதாக இருக்கும்.
ஆயுர்வேத சிகிச்சை குறித்து ஆங்கில மருத்துவ டாக்டர்கள் மத்தியில் நிலவும் தவறான கருத்துகளை களையவும், அதன் பலன் குறித்த சந்தேகங்களை போக்கவும் இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது. ஆயுர்வேதம் வெறும் மருத்துவமுறை அல்ல, நோயற்ற வாழ்க்கையை வாழும் வழி ஆகும்' என்றார்.
ஆனால் ஆங்கில மருத்துவ டாக்டர்களுக்கு எப்போது ஆயுர்வேத பயிற்சி அளிக்கப்படும் என்ற விவரத்தை உத்தரகாண்ட் அரசு இன்னும் அறிவிக்கவில்லை.