உத்தரகாண்ட்: கனமழையால் வீடு இடிந்து 3 பேர் பலி; 6 பேர் காயம்
|உத்தரகாண்டின் அரித்துவாரில் தொடர் கனமழையால், ரேசன் மற்றும் அத்தியாவசிய பொருட்களை ஏற்றி வந்த லாரி ஒன்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.
டேராடூன்,
உத்தரகாண்டின் அரித்துவாரில் தொடர் கனமழையால், ரேசன் மற்றும் அத்தியாவசிய பொருட்களை ஏற்றி வந்த லாரி ஒன்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.
உத்தரகாண்டின் அரித்துவார் மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. இதில், ரூர்கீ நகரருகே பார்ப்பூர் கிராமத்தில் நேற்று மாலை வீடு ஒன்று இடிந்து விழுந்ததில், பலர் மண்ணுக்குள் புதைந்தனர்.
அவர்களில் 3 பேர் உயிரிழந்தனர். 6 பேர் காயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இதேபோன்று, தெஹ்ரி மாவட்டத்தின் கன்சாலி பகுதியில் மேகவெடிப்பு ஏற்பட்டதில் ஒரு குடும்பமே காணாமல் போயுள்ளது என கூறப்படுகிறது. அரித்துவார் நகரில் தொடர் கனமழையால், ரேசன் மற்றும் அத்தியாவசிய பொருட்களை ஏற்றி வந்த லாரி ஒன்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.
இதற்கு முன், கடந்த 25-ந்தேதி இதே பகுதியில் திடீரென ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி, 10-க்கும் மேற்பட்ட கார்கள் நீரில் அடித்து செல்லப்பட்டன. நகர் முழுவதும் சாலைகளில் வெள்ள நீர் சூழந்து காணப்பட்டது. டேராடூனில் பல மணிநேரம் வரை மழை பெய்துள்ளது. கனமழையால் தல்லா கிராமத்தில் 4 வீடுகள் இடிந்து விழுந்தன. எனினும், இதில் யாரும் உயிரிழக்கவில்லை.