< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
உத்தரகாண்ட்: சுவர் இடிந்து விழுந்ததில் 2 சிறுவர்கள் உயிரிழப்பு
|6 Aug 2023 11:34 AM IST
கனமழை காரணமாக சுவர் இடிந்து விழுந்ததில் 2 சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
டேராடூன்,
உத்தரகாண்ட் மாநிலத்தின் மரோடா கிராமத்தில் நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக வீட்டின் பின் சுவர் இடிந்து விழுந்ததில் 2 சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த விபத்து குறித்து மாநில பேரிடர் மீட்பு படை அதிகாரி கூறுகையில்,' மரோடா கிராமத்தில் நேற்று இரவு கனமழை பெய்தது. அதில் பிரவின் தாஸ் என்பவரது வீட்டின் பின்பக்க சுவர் இடிந்து விழுந்தது. சுவர் இடிபாடுகளுக்குள் 2 சிறுவர்கள் சிக்கிக் கொண்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மாநில பேரிடர் மீட்பு படை, வருவாய் துணை ஆய்வாளர் மற்றும் காவல் துறையினர் 2 சிறுவர்களையும் மீட்டு அருகில் உள்ள ஆரம்ப சுகாதார பராமரிப்பு நிலையத்துக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர், 2 சிறுவர்களும் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக அறிவித்தார்' என அவர் கூறினார்.