< Back
தேசிய செய்திகள்
உத்தரப்பிரதேசம் என்கவுன்ட்டர் பிரதேசமாக மாறி வருகிறது - மாயாவதி
தேசிய செய்திகள்

உத்தரப்பிரதேசம் 'என்கவுன்ட்டர் பிரதேச'மாக மாறி வருகிறது - மாயாவதி

தினத்தந்தி
|
18 April 2023 12:20 AM IST

உத்தரப்பிரதேசம் 'என்கவுன்ட்டர் பிரதேச'மாக மாறி வருகிறது என்று பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி விமர்சித்துள்ளார்.

லக்னோ,

அத்தீக் அகமது மற்றும் அவரது சகோதரர் அஷ்ரப் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து பகுஜன் சமாஜ் தலைவரும் முன்னாள் முதல்-மந்திரியுமான மாயாவதி வெளியிட்ட டுவிட்டர் பதிவுகளில் கூறியிருப்பதாவது:-

போலீஸ் காவலில் இருக்கும்போது அத்தீக் அகமது, அவரது தம்பி அஷ்ரப் சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளனர். இதுவும் உமேஷ் பால் கொலை வழக்கு போன்று மிகக் கொடூர மான குற்றமாகும்.

இதுபோன்ற சம்பவங்கள் மாநிலத்தின் சட்டம், ஒழுங்கு நிலையை கேள்விக்குறியாக்கி வருகிறது. மாநில அரசின் செயல் பாடு கேள்விக்கு உரியதாக இருக்கிறது. இப்போது உத்தர பிரதேச மாநிலத்தில் சட்டத்தின் ஆட்சி நடைபெறுவதாக தெரிய வில்லை. உத்தர பிரதேச மாநிலம் 'என்கவுன்ட்டர் பிரதேச' மாநிலமாக மாறி வருகிறது. இதுகுறித்து அனைவரும் சிந் திக்க வேண்டியது அவசியம்" என்று மாயாவதி தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்