< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
உத்தர பிரதேசம்: மின்கசிவால் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்து - 4 குழந்தைகள் உயிரிழப்பு
|24 March 2024 7:43 PM IST
மின்கசிவு காரணமாக வீட்டில் தீ விபத்து ஏற்பட்டதில் 4 குழந்தைகள் உயிரிழந்தனர்.
லக்னோ,
உத்தர பிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள பல்லவ்புரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜானி. இவர் தனது மனைவி மற்றும் 4 குழந்தைகளுடன் வசித்து வந்தார். இந்த நிலையில், இவர்களது வீட்டில் இன்று திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
இது குறித்து தகவலறிந்து தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த 6 பேரையும் தீயணைப்பு வீரர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி 4 குழந்தைகளும் உயிரிழந்த நிலையில், பபிதா மற்றும் ஜானிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.