16 குழந்தைகளை தவிக்க விட்டு, மணமகனின் தந்தையுடன் மணமகளின் தாயார் ஓட்டம்
|மணப்பெண்ணின் தாயும் மணமகனின் தந்தையுடன் அடிக்க சந்தித்து காதலை வளர்த்துள்ளனர்.
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் கஸ்கஞ்ச் கிராமத்தில் மணப்பெண்ணின் தாயாருடன் மணமகனின் தந்தை ஓடிப்போன சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மணப்பெண்ணின் தந்தையும் மணமகனின் தந்தையும் 28 ஆண்டுகளாக நண்பர்களாக இருந்துள்ளனர். நண்பர்களாக இருந்தவர்கள் சம்பந்திகளாக மாற முடிவு செய்தனர். 2 மாதங்களுக்கு முன்பு இரு குடும்பத்தினரும் தங்களது பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.
அதன்பிறகு மணப்பெண்ணின் 35 வயதுடைய தாயும், மணமகனின் தந்தையும் அடிக்கடி சந்தித்து உள்ள ஆரம்பித்தனர். அவர்களுக்கு இடையே ஏற்பட்ட பழக்கம் படிப்படியாக காதலாக மாறியுள்ளது.
பிள்ளைகளுக்கு விரைவில் திருமணம் நடைபெற இருந்த நிலையில், மணப்பெண்ணின் தாயாருடன் மணமகனின் தந்தை ஓடி போயுள்ளார்.
இதில் அதிர்ச்சி அளிக்கக்கூடிய விஷயம் என்னெவென்றால் மணமகனின் தந்தைக்கு 10 குழந்தைகளும் மணமகனின் தாயுக்கு 6 குழந்தைகள் உள்ளனர் என்பதுதான். எஸ்பி உத்தரவின் பேரில் இந்த விவகாரம் தொடர்பாக எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.