< Back
தேசிய செய்திகள்

தேசிய செய்திகள்
உத்தரபிரதேசத்தில் மதக்கலவர வழக்கில் 14 பேர் விடுதலை

19 Jan 2023 12:23 AM IST
உத்தரபிரதேசத்தில் மதக்கலவர வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 14 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
அயோத்தி,
உத்தரபிரதேச மாநிலத்தின் பைசாபாத்தில் கடந்த 2012-ம் ஆண்டு சமாஜ்வாடி ஆட்சிக்காலத்தில் துர்கா தேவி ஊர்வலம் நடைபெற்றது. சமாஜ்வாடி கட்சி மூத்த தலைவர் மனோஜ் ஜெய்ஸ்வால் தலைமையில் நடந்த அந்த ஊர்வலத்தில் துர்கா தேவி சிலை சேதப்படுத்தப்பட்டதாக வதந்தி பரவியது.
அதைத் தொடர்ந்து ஏற்பட்ட மதக்கலவரத்தில் 2 பேர் கொல்லப்பட்டனர், பலர் காயமடைந்தனர். மேலும் பல கடைகள், வீடுகள் சூறையாடப்பட்டன. கலவர கும்பல் போலீசாரை தாக்கியதுடன், போலீஸ் வாகனங்களுக்கும் தீயிட்டது.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 14 பேரையும் மாவட்ட கோர்ட்டு நீதிபதி விடுதலை செய்தார். போதிய சாட்சிகள் இல்லாததால் அவர்கள் விடுவிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.