< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
உத்தரபிரதேசத்தில் 15-ந் தேதி மாநிலங்களவை இடைத்தேர்தல்
|23 Aug 2023 2:58 AM IST
உத்தரபிரதேசத்தில் 15-ந் தேதி மாநிலங்களவை இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
புதுடெல்லி,
உத்தரபிரதேசத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பா.ஜனதாவை சேர்ந்த ஹர்த்வார் துபே கடந்த ஜூன் 26-ந் தேதி காலமானார். அவரது பதவிக்காலம், 2026-ம் ஆண்டு நவம்பர் மாதம்வரை உள்ளது.
இந்நிலையில், காலியாக உள்ள அந்த மாநிலங்களவை எம்.பி. பதவிக்கு செப்டம்பர் 15-ந் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் போட்டியிட்டால், அன்று மாலை 4 மணிவரை ஓட்டுப்பதிவு நடைபெறும். ஓட்டுப்பதிவு முடிவடைந்த ஒரு மணி நேரம் கழித்து, ஓட்டு எண்ணிக்கை நடைபெறும்.