வட மாநிலங்களில் 2-வது நாளாக கடும் பனிப்பொழிவு
|டெல்லி, ராஜஸ்தான் உள்ளிட்ட வட மாநிலங்களில் குளிர் மிக அதிகமாக உள்ளது.
புதுடெல்லி,
டெல்லி, ராஜஸ்தான் உள்ளிட்ட வட மாநிலங்களில் குளிர் மிக அதிகமாக உள்ளது. டெல்லியை பொறுத்தவரை கடந்த சில தினங்களாக அதிகாலையில் பனிப்பொழிவு மிக அதிகமாக இருந்தது. இதனால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் வாகன ஓட்டுனர்கள் மிகவும் அவதிப்பட்டனர். இதன் காரணமாக பல ரெயில்கள் காலதாமதம் ஆகின. விமான போக்குவரத்திலும் பாதிப்பு இருந்தது. பனிப்பொழிவு காரணமாக நகரின் குறைந்தபட்ச வெப்பநிலை இன்று அதிகாலை நிலவரப்படி 7 டிகிரியாக இருந்தது. சப்தர்ஜங் பகுதியில்7.8 டிகிரியை காட்டியது. கடுங்குளிரை சமாளிக்க சாலையில் பொதுமக்கள் தீ மூட்டுகிறார்கள். மேலும் தூங்கும்போது அறையில் வெப்பமூட்டிகளை பயன்படுத்துகிறார்கள்.
இதைப்போல டெல்லியை சுற்றியுள்ள பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம் மாநிலங்களிலும் குளிர் மிக அதிகமாக இருப்பதாக தெரியவந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் சில இடங்களில் 0 டிகிரி வெப்பநிலை இருந்தது குறிப்பிடத்தக்கது.