< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
உத்தர பிரதேசம்: பூட்டிய அறைக்குள் நாய் மீது கொடூர தாக்குதல் - வீடியோ வைரலான நிலையில் ஒருவர் கைது
|29 Feb 2024 7:49 PM IST
உத்தர பிரதேசத்தில் நாயை அடைத்து வைத்து கொடூரமாக தாக்கிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
லக்னோ,
உத்தரப்பிரதேச மாநிலம் தேவ்பந்த் பகுதியைச் சேர்ந்த குல்தீப் என்ற நபர், பூட்டிய அறைக்குள் ஒரு நாயை கொடூரமாக தாக்கிய வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்த வீடியோ காவல்துறையினரின் கவனத்திற்கு சென்றது.
இதையடுத்து போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி, குல்தீப்பை கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் நாய்களை இவ்வாறு அடிக்கடி அடித்து துன்புறுத்தும் பழக்கம் உடையவர் என்பது தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் காயமடைந்த நாய் மீட்கப்பட்ட நிலையில், அதற்கு தற்போது மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கைது செய்யப்பட்ட குல்தீப் மீது விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தின் 11-வது பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.