< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
உத்தரபிரதேசத்தில் 5 நக்சலைட் பயங்கரவாதிகள் கைது
|18 Aug 2023 12:55 AM IST
உத்தரபிரதேசத்தில் 5 நக்சலைட் பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.
பல்லியா,
உத்தரபிரதேசத்தில் பல்வேறு மாவட்டங்களில் நக்சலைட் பயங்கரவாதிகள், தங்கள் இயக்கத்திற்கு ஆள் சேர்த்து வந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பயங்கரவாத தடுப்பு போலீசார் குழு உருவாக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் பல்லியா மாவட்டம் பசந்த்பூர் கிராமத்தில் சந்தேகத்திற்கு இடமான 5 பேர் பிடிபட்டனர். அவர்கள் அந்த மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை பூர்விகமாக கொண்டவர்கள். அவர்களிடம் நக்சலைட் இயக்க ஆதரவு புத்தகங்கள், துண்டு பிரசுரங்கள், கையெழுத்து பிரதிகள் மற்றும் எலக்ட்ரானிக் கருவிகள், ஆயுதங்கள் இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். அவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் நக்சலைட் பயங்கரவாத இயக்கத்துக்கு ஆதரவாக வெவ்வேறு பெயர் கொண்ட இயக்கங்களுடன், பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபட்டு வருவது தெரியவந்தது.