ஆசிரியையை கொலை செய்த 12ம் வகுப்பு மாணவன் கைது! ஆசிரியையுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தது அம்பலம்
|வீட்டில் தனியாக இருந்த ஆசிரியையை கொடூரமாக குத்தி கொலை செய்துவிட்டு மாணவன் தப்பிவிட்டான்.
அயோத்தி,
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ஆசிரியையை கொலை செய்ததாக சிறுவனை போலீசார் கைது செய்தனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் அம்பேத்கர் நகர் மாவட்டத்தை சேர்ந்த அரசுப்பள்ளி ஆசிரியை(35 வயது), ஏற்கெனவே திருமணமாகி தன் கணவர் மற்றும் தாயாருடன் வசித்து வந்துள்ளார். அவருடைய கணவரும் ஓர் பள்ளியில் ஆசிரியராக உள்ளார்.
இந்நிலையில் அந்த ஆசிரியைக்கு அயோத்தி மாவட்டத்திலுள்ள ஒரு தொடக்கப்பள்ளிக்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டது. அப்பகுதியில் வசித்து வந்த மாணவனுடன் அந்த ஆசிரியைக்கு பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.
இதனிடையே, அந்த ஆசிரியை 5 மாத கர்ப்பமாக இருந்துள்ளார். இதனை கேள்விப்பட்டு அதிர்ச்சியடைந்த மாணவன் தங்கள் உறவை முறித்துக்கொள்ள விரும்பினான். அவரிடம் கூறியுள்ளான். ஆனால் அவர் அதற்கு மறுத்துவிட்டார்.
அதன்பின், ஒரு நாள் தனது வீட்டில் தனியாக இருந்த ஆசிரியையை கூர்மையான ஆயுதத்தால் கொடூரமாக பல முறை குத்தி கொலை செய்துவிட்டு மாணவன் தப்பிவிட்டான்.இதை திருட்டு வழக்கு என சித்தரிக்க முயற்சித்த மாணவன், அந்த வீட்டில் பீரோவை உடைத்து, அதில் இருந்து ரூ.50 ஆயிரம் பணத்தையும் எடுத்து சென்றுள்ளான்.
ஜூன் 1 அன்று இந்த சம்பவம் நடைபெற்ற நிலையில், போலீசார் கொலையாளியை தீவிரமாக தேடி வந்தனர்.
அப்பகுதி சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், அதில் ஒருவன் சந்தேகத்திற்கிடமாக டி-சர்ட் அணிந்து கொண்டு அங்கே நடமாடியதை கண்டனர். அந்த டி-சர்டில் இருந்த நிறுவனத்தின் பெயரை துருப்புச்சீட்டாக பயன்படுத்தி, துணிக்கடைகளில் விசாரணை செய்தனர். நீண்ட விசாரணைக்கு பின் நேற்று அந்த மாணவனை மடக்கிப்பிடித்து உண்மையை வெளிக்கொண்டு வந்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து அயோத்தி போலீஸ் டிஐஜி ஏபி சிங் கூறுகையில்:-
ஆசிரியையை கொலை செய்த 12ம் வகுப்பு மாணவன் கைது செய்யப்பட்டான். சிசிடிவி காட்சிகளில் அந்த மாணவன் அடையாளம் காணப்பட்டான் மற்றும் அவனை பிடிக்க அவனது டி-சர்ட் துப்பாக சிக்கியது, அது பயன்படுத்தப்பட்டது.
கைது செய்யப்பட்ட சிறுவன் கொலை செய்யப்பட்ட ஆசிரியையுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தான். இந்த முறைதவறிய உறவு, சமூகத்தில் வெளிப்பட்டுவிடுமோ என்ற பயத்தில், அவன் ஆசிரியையுடனான உறவில் இருந்து வெளியேற விரும்பினான்.
ஆனால், அந்த ஆசிரியை அவனை மிரட்டியுள்ளார். இந்த சம்பவத்தை பற்றியும் மாணவனின் மோசமான நடத்தையை பற்றிய தகவல்களை வெளியிடுவதாக அவனை மிரட்டினார். அதனால் என்ன செய்வது என தெரியாமல் தவித்த மாணவன், அந்த ஆசிரியையை கொலை செய்தான். விசாரணை நடந்து வருகிறது.
இவ்வாறு அயோத்தி போலீஸ் டிஐஜி ஏபி சிங் தெரிவித்தார்.