< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
உத்தர பிரதேசம்: கார் விபத்தில் குழந்தை உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழப்பு
|31 Oct 2023 7:21 AM IST
விபத்து குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக மாவட்ட எஸ்.பி. துர்கேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
லக்னோ,
உத்தர பிரதேச மாநிலம் ஹர்தோய் மாவட்டத்தில் உள்ள பில்ஹர்-கத்ரா நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று, திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி விபத்திற்குள்ளானது. அந்த காரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பயணம் செய்து கொண்டிருந்தனர்.
அவர்கள் பராகந்த் கிராமத்தில் இருந்து நயாகோன் என்ற பகுதிக்கு சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த விபத்தில் 4 வயது குழந்தை உள்பட காரில் இருந்த 5 பேரும் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாக மாவட்ட எஸ்.பி. துர்கேஷ் குமார் தெரிவித்துள்ளார்.