< Back
தேசிய செய்திகள்
ஜி20 மாநாட்டில் பங்கேற்க டெல்லி வந்தடைந்தார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்...!
தேசிய செய்திகள்

ஜி20 மாநாட்டில் பங்கேற்க டெல்லி வந்தடைந்தார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்...!

தினத்தந்தி
|
8 Sept 2023 7:18 PM IST

ஜி20 உச்சிமாநாட்டில் பங்கேற்க உலக நாடுகளின் தலைவர்கள் இந்தியா வந்த வண்ணம் உள்ளனர்.

டெல்லி,

உலகின் மிகவும் சக்திவாய்ந்த அமைப்புகளில் ஒன்றான ஜி20 அமைப்பின் தலைமை பதவியை இந்தியா வகித்து வருகிறது.

இதனிடையே, ஜி20 உச்சி மாநாடு நாளை மற்றும் நாளை மறுதினம் டெல்லியில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்க உலக நாடுகளின் தலைவர்கள் இந்தியா வருகை தந்துள்ளனர்.

இந்நிலையில், ஜி20 மாநாட்டில் பங்கேற்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று இந்தியா வந்தார். டெல்லி விமான நிலையம் வந்த ஜோ பைடனை மூத்த அதிகாரிகள் வரவேற்றனர். விமான நிலையத்தில் ஜோ பைடனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. டெல்லி வந்தடைந்த ஜோ பைடன் இன்று பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார்.

மேலும் செய்திகள்