< Back
தேசிய செய்திகள்
குற்ற வழக்குகளில் கைதாகி ஜாமீனில் வெளிவந்து தலைமறைவான 8 பேர் சிக்கினர்
தேசிய செய்திகள்

குற்ற வழக்குகளில் கைதாகி ஜாமீனில் வெளிவந்து தலைமறைவான 8 பேர் சிக்கினர்

தினத்தந்தி
|
26 Aug 2023 3:48 AM IST

கோலார் தங்கவயலில் குற்ற வழக்குகளில் கைதாகி ஜாமீனில் வெளி வந்து தலைமறைவான 8 பேர் 5 ஆண்டுகளுக்கு பிறகு போலீசாரிடம் சிக்கினர்.

கோலார் தங்கவயல்:

கோலார் தங்கவயலில் குற்ற வழக்குகளில் கைதாகி ஜாமீனில் வெளி வந்து தலைமறைவான 8 பேர் 5 ஆண்டுகளுக்கு பிறகு போலீசாரிடம் சிக்கினர்.

குற்ற வழக்குகள்

கோலார் மாவட்டம் கோலார் தங்கவயல் போலீஸ் மாவட்ட எல்லைக்கு உட்பட்ட ராபர்ட்சன்பேட்டை, ஆண்டர்சன்பேட்டை மற்றும் காமசமுத்திரம் ஆகிய போலீஸ் நிலையங்களின் கீழ் உள்ள பகுதிகளில் பல்வேறு குற்றச்சம்பவங்களில் சிலர் ஈடுபட்டு வந்தனர்.

அவர்களில் 8 பேரை போலீசார் கைது செய்து கோலார் தங்கவயலில் உள்ள கோர்ட்டில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் ஆஜர்படுத்தினர். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த 8 பேரும் கோர்ட்டில் விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாகினர்.

8 பேர் கைது

அவர்கள் 8 பேரையும் கைது செய்ய கோர்ட்டு பலமுறை உத்தரவிட்டும் அவர்களை பிடிக்க முடியவில்லை. ராபர்ட்சன்பேட்டை, ஆண்டர்சன்பேட்டை, காமசமுத்திரம் ஆகிய 3 போலீஸ் நிலைய போலீசார் 8 பேரையும் வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மேற்கண்ட போலீஸ் நிலையங்களை சேர்ந்த போலீசார் தலைமறைவாக இருந்த 8 பேரையும் கைது செய்தனர்.

பின்னர் நேற்று அவர்கள் 8 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர்கள் 8 பேரையும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க கோர்ட்டு உத்தரவிட்டது. அதன் பேரில் போலீசார் 8 பேரையும் சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்