யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியீடு
|ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்காக யுபிஎஸ்சி நடத்திய முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியானது.
புதுடெல்லி,
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்காக யுபிஎஸ்சி நடத்திய முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியானது. 14,624 பேர் தேர்ச்சி பெற்று மெயின்ஸ் தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளனர்.
கடந்த மே மாதம் 28ஆம் தேதி நடைபெற்ற யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
தேர்வர்கள் http://www.upsc.gov.in என்ற இணைய தளத்தில் விபரங்களை அறிந்து கொள்ளலாம். மேலும் சந்தேகங்களுக்கு 011-23385271, 011-23098543 (அ) 011-23381125 ஆகிய எண்களை தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
முதல்நிலை தேர்வில் வெற்றி பெற்றுள்ள மாணவர்கள் மெயின் தேர்வுக்கு மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் யுபிஎஸ்சி மெயின் தேர்விற்கான விண்ணப்பப்பதிவு தேதி உள்ளிட்ட அறிவிப்புகள் விரைவில் இணையத்தில் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் எனப்படும் யுபிஎஸ்சி ஆண்டுதோறும் ஐஏஎஸ், ஐபிஎஸ், மற்றும் ஐஆர்எஸ் உள்ளிட்ட 24 வகையான உயர் பதவிகளுக்கான பதவிகளுக்கான தேர்வுகளை நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.