< Back
தேசிய செய்திகள்
உ.பி.யில் படகு கவிழ்ந்த விபத்தில் பச்சிளம் குழந்தை உட்பட 3 பேர் சடலமாக மீட்பு! நீரில் மூழ்கியவர்களை தேடும் பணி தீவிரம்
தேசிய செய்திகள்

உ.பி.யில் படகு கவிழ்ந்த விபத்தில் பச்சிளம் குழந்தை உட்பட 3 பேர் சடலமாக மீட்பு! நீரில் மூழ்கியவர்களை தேடும் பணி தீவிரம்

தினத்தந்தி
|
12 Aug 2022 4:58 PM IST

உத்தர பிரதேசத்தில் யமுனை ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பலர் உயிரிழந்தனர் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லக்னோ,

உத்தர பிரதேசத்தின் பண்டா பகுதியில் யமுனை ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் குறைந்தது அதில் பயணித்த பலர் உயிரிழந்தனர் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த துயர சம்பவம் நேற்று மாலை 4 மணியளவில் நடந்தது. அந்த படகில் ஏறத்தாழ 45 பேர் பயணித்ததாக கூறப்படுகிறது. மீதமுள்ளவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

நேற்று 4 பேர் சடலமாக மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிலையில், 2 பெண்கள் மற்றும் 1 குழந்தை என மொத்தம் 3 பேர் சடலமாக மீட்கப்பட்டதாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த படகு பண்டா மாவட்டத்தின் மார்க் பகுதியிலிருந்து பதேபூர் மாவட்டத்தின் ஜரோலி பகுதிக்கு செல்லும்போது அதிக வேகமாக வீசிய காற்றின் காரணமாக படகு நிலை தடுமாறி ஆற்றில் கவிழ்ந்து விபத்து நிகழ்ந்துள்ளது.

ஆற்றுக்குள் விழுந்தவர்களை மீட்க, நீச்சல் வீரர்கள் அழைக்கப்பட்டு மீட்பு பணி நடைபெறுகிறது. மேலும் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் தீவிரமாக தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.

15 பயணிகள் நீந்தி கரை சேர்ந்துள்ளதாகவும் மீதமுள்ளவர்கள் ஆற்றில் மூழ்கி இருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது. படகில் பயணித்த ஏறத்தாழ 20-25 பேரை காணவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரபிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் உத்தரவின் பேரில், அம்மாநில மந்திரிகள் ராகேஷ் சச்சன் மற்றும் ராம்கேஷ் நிஷாத் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.மேலும், பேரிடர் நிவாரண நிதியில் இருந்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிதியுதவி வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்