< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
சொத்து தகராறில் மைத்துனர் மீது ஆசிட் ஊற்றி கொலை செய்த பெண்ணுக்கு ஆயுள் தண்டனை
|8 April 2024 12:31 AM IST
உத்தர பிரதேசத்தில் மைத்துனர் மீது ஆசிட் ஊற்றி கொலை செய்த பெண்ணுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பல்லியா,
சொத்து தகராறில் மைத்துனரை கொலை செய்த வழக்கில் உத்தர பிரதேச பெண்ணுக்கு ஆயுள் தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் மித்தா கிராமத்தில் கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை 20-ந்தேதி அஸ்ரா கட்டூன் என்ற பெண் சொத்து தகராறில் அவரது மைத்துனர் அகமது என்பவர் மீது ஆசிட் ஊற்றினார். இதில் பலத்த காயமடைந்த அகமது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த நிலையில் இந்த வழக்கில் அஸ்ரா கட்டூனுக்கு ரூ.10 ஆயிரம் அபராதமும், ஆயுள் தண்டனையும் விதித்து மாவட்ட செஷன்ஸ் கோர்ட்டு நீதிபதி அசோக் குமார் தீர்ப்பளித்துள்ளார்.