< Back
தேசிய செய்திகள்
வரதட்சணை கேட்டு கொடுமை: தந்தையுடன் சேர்ந்து மனைவியை அடித்துக் கொன்ற கணவன்..!
தேசிய செய்திகள்

வரதட்சணை கேட்டு கொடுமை: தந்தையுடன் சேர்ந்து மனைவியை அடித்துக் கொன்ற கணவன்..!

தினத்தந்தி
|
14 Oct 2023 3:53 PM IST

உத்தரபிரதேசத்தில் பெண் ஒருவர் கணவர் மற்றும் மாமனாரால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

அசம்கர்,

உத்தரபிரதேச மாநிலம் அசம்கர் பகுதியில் பெண் ஒருவர் கணவர் மற்றும் மாமனாரால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு அனிதா (வயது 22) என்ற பெண், ஜஜ்மன்பூர் கிராமத்தைச் சேர்ந்த சூரஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். வரதட்சணையாக மோட்டார் சைக்கிள் கேட்டு சூரஜ் குடும்பத்தினர், அனிதாவை தொடர்ந்து துன்புறுத்தி வந்துள்ளனர்.

இந்த நிலையில் சூரஜ் மற்றும் அவரது தந்தை இருவரும் அனிதாவை அடித்துக் கொன்று அவரது உடலை வீட்டிற்கு அருகில் புதைத்துள்ளனர். பின்னர் தப்பியோடி தலைமறைவாகியுள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்த போலீசார் அனிதாவின் உடலை மீட்டு பிரதே பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வரதட்சணை, துன்புறுத்தல் மற்றும் கொலை உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாகியுள்ள சூரஜின் குடும்பத்தினரை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்