உ.பி.: மைத்துனியை கடத்தி, 16 நாளாக கட்டி போட்டு பலாத்காரத்தில் ஈடுபட்ட நபர்
|டெல்லியில் இருந்து மைத்துனியை கடத்தி சென்று, 16 நாளாக கட்டி போட்டு பலாத்காரத்தில் ஈடுபட்ட நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
மீரட்,
டெல்லியை சேர்ந்த 19 வயது இளம்பெண்ணை காணவில்லை என உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு உள்ளனர். எனினும், நீண்ட நாட்களாக அவரை போலீசாரால் கண்டு பிடிக்க முடியவில்லை.
இந்நிலையில், இளம்பெண் உத்தர பிரதேசத்தின் மீரட் நகரில் இருப்பது தெரிய வந்தது. அவரது இருப்பிடம் அடிப்படையில் விவரங்களை போலீசார் சேகரித்தனர்.
இதனை தொடர்ந்து, போலீசார் அந்த பகுதிக்கு சென்று இளம்பெண்ணை பாதுகாப்பாக மீட்டனர். எனினும், அவரை கடத்திய நபர் தப்பியோடி விட்டார். அவரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
இளம்பெண்ணிடம் நடந்த விசாரணையில், அவரது உறவினரே அவரை கடத்தி சென்றது தெரிய வந்தது. அந்த நபரின் மைத்துனியான, இளம்பெண்ணை டெல்லியில் இருந்து கடத்தி சென்று, கடந்த 16 நாட்களாக அறையில் கட்டி போட்டு, பாலியல் பலாத்காரத்தில் அந்நபர் ஈடுபட்டு உள்ளார்.
போலீசார் சென்று அவரை மீட்டு உள்ளனர். இந்த சம்பவம் பற்றி, வடகிழக்கு மாவட்ட போலீசார் எப்.ஐ.ஆர். ஒன்றை பதிவு செய்து, தப்பியோடிய உறவினரை கண்டறியும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.