< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
உ.பி. முதல்-மந்திரி சென்ற ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கம்
|26 Jun 2022 11:15 AM IST
உ.பி. முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் சென்ற ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
லக்னோ,
உத்தரபிரதேச மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் சென்ற ஹெலிகாப்டர் அவசரமாக வாரணாசியில் தரையிறக்கப்பட்டது.
வாரணாசியில் இருந்து லக்னோ செல்ல முயன்றபோது ஹெலிகாப்டர் மீது பறவை மோதியது. பறவை மோதியதால் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.