< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
தேர்தல் பணியில் இருந்து விலக்கு பெற போலி கொரோனா சான்றிதழ் கொடுத்த பள்ளி ஆசிரியை
|11 May 2023 8:47 AM IST
தனக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதாக கூறி, மருத்துவ சான்றிதழையும் சமர்ப்பித்தார்.
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் பிலிப்பிட் மாவட்டம் புரான்பூர் பகுதியில் உள்ள ஒரு தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருபவர் ரித்து தோமர். இன்று (வியாழக்கிழமை) நடைபெற உள்ள நகராட்சி தேர்தலில், அவருக்கு வாக்குச்சாவடி அதிகாரி பணி ஒதுக்கப்பட்டு இருந்தது.
அதில் இருந்து விலக்கு பெற விரும்பிய ரித்து தோமர், அதற்காக ஒரு மனுவை அளித்தார். அத்துடன், தனக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதாக கூறி, மருத்துவ சான்றிதழையும் சமர்ப்பித்தார்.
ஆனால், அந்த சான்றிதழை அதிகாரிகள் பரிசோதித்தபோது, வேறு ஒருவரின் சான்றிதழை திருத்தி, ரித்து தோமர் தாக்கல் செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதையடுத்து, ரித்து தோமர் மீது போலீசில் புகார் அளிக்குமாறு அடிப்படை கல்வி அதிகாரிக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.