< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
பெண் தோழியை சுட்டு கொன்றுவிட்டு வாலிபர் தற்கொலை
|14 April 2023 6:04 AM IST
உத்தரபிரதேசத்தின் சுல்தான்பூரில் பெண் தோழியை சுட்டு கொன்றுவிட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
சுல்தான்பூர்,
உத்தரபிரதேசத்தின் சுல்தான்பூர் மாவட்டம் ராம்பூர் பப்புவான் கிராமத்தை சேர்ந்தவர் நாகேந்திரா (வயது 26). இவரும் அதே பகுதியை சேர்ந்த ரேணு (20) என்பவரும் சில ஆண்டுகளாக நட்புடன் பழகி வந்தனர்.
நேற்று காலை 10.15 மணிக்கு நாகேந்திரா, தனது பெண் தோழியை திடீரென துப்பாக்கியால் சுட்டார். பின்னர் அவர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். நாகேந்திரா சுட்டதில் ரேணுவும் சம்பவ இடத்திலேயே பலியானார்.
துப்பாக்கி சூடு சம்பவம் பற்றி தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இருவரது உடல்களையும் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.