< Back
தேசிய செய்திகள்
உ.பி.:  ராஜ்யசபை வேட்பாளர்களை அறிவித்தது சமாஜ்வாடி கட்சி
தேசிய செய்திகள்

உ.பி.: ராஜ்யசபை வேட்பாளர்களை அறிவித்தது சமாஜ்வாடி கட்சி

தினத்தந்தி
|
13 Feb 2024 1:00 PM IST

3 பேரும் வேட்புமனுக்களை இன்று தாக்கல் செய்யவுள்ளனர் என்று சமாஜ்வாடி கட்சியை சேர்ந்த செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.

லக்னோ,

நாடு முழுவதும் காலியாக இருக்கின்ற நாடாளுமன்ற மேலவையின் (ராஜ்யசபை) 56 காலி இடங்களுக்கான தேர்தல் வருகிற 27-ந்தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கலுக்கான கடைசி நாள் நாளை மறுதினம் (15-ந்தேதி) ஆகும்.

இந்த நிலையில், உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சியின் ராஜ்யசபை வேட்பாளர்களாக ராம்ஜிலால் சுமன், ஜெயா பச்சன் மற்றும் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி அலோக் ரஞ்சன் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர் என அக்கட்சி இன்று அறிவித்து உள்ளது.

இவர்களில், முன்னாள் திரைப்பட நடிகை மற்றும் அரசியல்வாதியான ஜெயா பச்சன் மீண்டும் ராஜ்யசபைக்கு நியமிக்கப்பட்டு உள்ளார். ரஞ்சன் முதன்முறையாக நியமிக்கப்படுகிறார்.

இந்நிலையில், அவர்கள் 3 பேரும் வேட்புமனுக்களை இன்று தாக்கல் செய்யவுள்ளனர் என்று அக்கட்சியை சேர்ந்த செய்தி தொடர்பாளர் ராஜேந்திர சவுத்ரி கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்