< Back
தேசிய செய்திகள்

தேசிய செய்திகள்
பள்ளி கட்டணம் செலுத்தாததால் 1-ம்வகுப்பு மாணவனை 4 மணி நேரம் நிற்க வைத்து தண்டனைதலைமை ஆசிரியர் உள்பட 3 பேர் மீது வழக்கு

10 Feb 2023 2:26 AM IST
பல்லியா,
உத்தரபிரதேசத்தின் பல்லியா நகருக்கு அருகே ரஸ்தா போலீஸ் நிலைய எல்லையில் ஒரு தனியார் பள்ளி செயல்படுகிறது. இங்கு சிராஜ் அக்தர் என்பவரது மகன் அயாஸ் அக்தர் (வயது7) ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறான்.
மாணவன் அயாஸை, பள்ளி கட்டணம் செலுத்தாதற்காக வகுப்பிற்கு வெளியே கைகளை உயர்த்தியபடி 4 மணி நேரம் நிற்க வைத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அவனது தந்தை போலீசில் புகார் செய்தார்.
இதையடுத்து பள்ளி தலைமை ஆசிரியர் சத்யேந்திர பால், பள்ளி மேலாளர் பிரத்யுமன் வர்மா, ஆசிரியர் அப்சானா ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். விசாரணை நடந்துவரும் நிலையில், யாரும் கைது செய்யப்படவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.