< Back
தேசிய செய்திகள்
3 நாடாளுமன்ற தொகுதிகள் உள்பட 6 மாநிலங்களில் 10 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அமைதியாக நடந்தது
தேசிய செய்திகள்

3 நாடாளுமன்ற தொகுதிகள் உள்பட 6 மாநிலங்களில் 10 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அமைதியாக நடந்தது

தினத்தந்தி
|
23 Jun 2022 8:35 PM GMT

டெல்லி, உத்தரபிரதேசம், பஞ்சாப், திரிபுரா, ஆந்திரா மற்றும் ஜார்கண்ட் ஆகிய 6 மாநிலங்களில் பல்வேறு காரணங்களால் 10 தொகுதிகள் காலியாக உள்ளன.

புதுடெல்லி,

டெல்லி, உத்தரபிரதேசம், பஞ்சாப், திரிபுரா, ஆந்திரா மற்றும் ஜார்கண்ட் ஆகிய 6 மாநிலங்களில் பல்வேறு காரணங்களால் 10 தொகுதிகள் காலியாக உள்ளன. இதில் பஞ்சாப்பில் ஒன்று, உத்தரபிரதேசத்தில் 2 என மொத்தம் 3 நாடாளுமன்ற தொகுதிகளும் காலியாக அடங்கும். இந்த தொகுதிகளுக்கு நேற்று இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.

உத்தரபிரதேசத்தில் அசம்கார், ராம்பூர் நாடாளுமன்ற தொகுதிகளில் எம்.பி.யாக இருந்த முறையே அகிலேஷ் யாதவ், அசம்கான் ஆகியோர் ராஜினாமா செய்து சட்டசபை தேர்தலில் போட்டியிட்டதால், அந்த தொகுதிகளுக்கு நேற்று வாக்குப்பதிவு நடந்தது. திரிபுராவில் எம்.எல்.ஏ.க்களின் கட்சித்தாவல், தகுதி நீக்கம் மற்றும் மரணம் ஆகிய காரணங்களால் அகர்தலா, பர்தோவாலி நகர், சுர்மா மற்றும் ஜூபராஜ்நகர் ஆகிய 4 சட்டசபை தொகுதிகள் காலியாக உள்ளன.இவற்றுக்கு நேற்று தேர்தல் நடந்தது. இதைப்போல ஆந்திராவின் அட்மகுரு, டெல்லியின் ராஜிந்தர் நகர், ஜார்கண்டின் மந்தர் ஆகிய சட்டசபை தொகுதிகளுக்கும் நேற்று இடைத்தேர்தல் நடத்தப்பட்டன.

இந்த இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் வருகிற 26-ந்தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. நேற்றைய இடைத்தேர்தல் அமைதியாக நடந்து முடிந்ததாக தேர்தல் கமிஷன் வட்டாரங்கள் தெரிவித்தன.

மேலும் செய்திகள்