< Back
தேசிய செய்திகள்
உ.பி: மாபியா தலைவன் அனில் துஜானாவை என்கவுண்டரில் சுட்டுக்கொன்ற போலீசார்.!
தேசிய செய்திகள்

உ.பி: மாபியா தலைவன் அனில் துஜானாவை என்கவுண்டரில் சுட்டுக்கொன்ற போலீசார்.!

தினத்தந்தி
|
4 May 2023 6:54 PM IST

துஜானா மீது 18 கொலை வழக்குகள் உட்பட 25 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

லக்னோ,

உத்தரப் பிரதேச சிறப்பு அதிரடிப்படையினர் மீரட்டில் நடத்திய என்கவுன்டரில் பிரபல கேங்ஸ்டர் அனில் துஜானா சுட்டுக்கொல்லப்பட்டார்.

துஜானா மீது 18 கொலை வழக்குகள் உட்பட 25 வழக்குகள் நிலுவையில் உள்ளன என கூடுதல் காவல்துறை தலைமை இயக்குநர் அமிதாப் யாஷ் தெரிவித்துள்ளார். இந்த 25 வழக்குகளில் கலவரம், கொள்ளை, மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அடங்கும்.

கொலை வழக்கில் ஜாமீன் பெற்று சமீபத்தில் சிறையில் இருந்து வெளியே வந்த அவர் தனக்கு எதிராக தொடரப்பட்ட கொலை வழக்கில் முக்கிய சாட்சிகளில் ஒருவரை கொலை செய்ய துஜானா திட்டமிட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து அவரை கைதுசெய்ய போலீசார் முயன்றனர். அப்போது நடந்த துப்பாக்கிச்சண்டையில் அவர் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

யோகி ஆதித்யநாத், உத்தரபிரதேச முதல் மந்திரியாக பதவியேற்ற 2017ஆம் ஆண்டு முதல் இதுவரை நடந்த மோதலில் 183 கும்பல் கொல்லப்பட்டுள்ளதாக உ.பி காவல்துறை இந்த மாதம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்