< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
உ.பி: வாகன சோதனையின்போது சொகுசு கார் மோதி காவலர் உயிரிழப்பு
|29 Jan 2024 1:42 PM IST
உத்தர பிரதேசத்தில் வாகனசோதனையின்போது சொகுசு கார் மோதி காவலர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் சராய் அகில் என்ற பகுதியில் அவினேஷ் துபே (வயது 25) என்ற காவலர் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தார். இந்தநிலையில் இன்று காலை வாகன சோதனை நடந்து கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத சொகுசு கார் ஒன்று காவலர் அவினேஷ் துபே மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் சென்று விட்டதாக மாவட்ட கண்காணிப்பாளர் பிரிஜேஷ் ஸ்ரீவஸ்தவா கூறியுள்ளார்.
சொகுசு கார் மோதியதில் படுகாயம் அடைந்த காவலர் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்திய டிரைவர் தப்பி ஓடிவிட்டார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு டிரைவரை பிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளதாக மாவட்ட கண்காணிப்பாளர் பிரிஜேஷ் ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார்.