< Back
தேசிய செய்திகள்
உ.பி.:  குரங்கு குட்டியுடன் விளையாடி ரீல்ஸ் வெளியிட்ட நர்சுகள்; அடுத்து நடந்த அதிரடி

கோப்பு படம்

தேசிய செய்திகள்

உ.பி.: குரங்கு குட்டியுடன் விளையாடி ரீல்ஸ் வெளியிட்ட நர்சுகள்; அடுத்து நடந்த அதிரடி

தினத்தந்தி
|
9 July 2024 12:05 PM GMT

விசாரணை குழுவின் அறிக்கை வரும் வரை நர்சுகள் 6 பேரும் துறையில் பணியாற்றுவதில் இருந்து சஸ்பெண்டு செய்யப்படுகின்றனர் என அறிக்கை தெரிவிக்கின்றது.

பஹ்ரைச்,

உத்தர பிரதேசத்தின் பஹ்ரைச் நகரில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில் பணியில் இருந்த 6 நர்சுகள் பணி நேரத்தில் குரங்கு குட்டியுடன் விளையாடி கொண்டு இருந்துள்ளனர். அதனை ரீல்சாக எடுத்து சமூக ஊடகத்திலும் பதிவிட்டு உள்ளனர்.

இதுபற்றிய வீடியோ ஒன்று வைரலாக பரவியது. இதனை அறிந்ததும், அரசு மருத்துவமனையின் முதல்வர் சஞ்சய் கத்ரி, நர்சுகள் அஞ்சலி, கிரண் சிங், ஆஞ்சல் சுக்லா, பிரியா ரிச்சர்டு, பூனம் பாண்டே மற்றும் சந்தியா சிங் ஆகிய 6 பேரையும் சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டு உள்ளார்.

தொடர்ந்து அவர் கூறும்போது, பணிநேரத்தில் குரங்குடன் ரீல்ஸ் எடுத்ததுடன், வேலையில் அலட்சியத்துடன் இருந்தது மற்றும் இந்த வீடியோவால் மருத்துவ கல்லூரியின் நற்பெயர் கெட்டு விட்டது என கூறியுள்ளார்.

இந்த விவகாரம் பற்றி விசாரிக்க விசாரணை குழு ஒன்றும் அமைக்கப்பட்டு உள்ளது என அவர் கூறியுள்ளார். அதன் அறிக்கை வரும் வரை நர்சுகள் 6 பேரும் துறையில் பணியாற்றுவதில் இருந்து சஸ்பெண்டு செய்யப்படுகின்றனர் என அதுபற்றி வெளியிடப்பட்ட அறிக்கை தெரிவிக்கின்றது.

இதுபற்றி மகராஜா சுஹேல்தேவ் மாநில மருத்துவ கல்லூரியின் கீழ் செயல்படும் மகரிஷி பாலர்க் மருத்துவமனையின் டாக்டர் எம்.எம். திரிபாதி கூறும்போது, நடந்த சம்பவம் பற்றி விசாரிக்க டாக்டர்கள் அடங்கிய 5 பேர் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது என கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்