மறுபிறவி எடுத்த சிறுவன்...! பாட்டியை மனைவி என அழைத்தான்...!
|ஆர்யன் தனது 4 வயதில் தனது தாயிடம் நீ என் தாய் அல்ல என்று அடிக்கடி கூறுவார். கடைசியாக மெயின்புரிக்கு வந்ததும் பாட்டியை பெயர் சொல்லி கூப்பிட்டு உள்ளார்.
லக்னோ
`நம் முந்தைய கர்மவினைகளுக்கு ஏற்பவே நமக்கு மறுபிறவி ஏற்படுகிறது' என்பது இந்து மதத்தின் தத்துவம்.
மறுபிறவி கதைகளை நாம் திரைப்படங்களில் பார்த்ததுண்டு.மறுபிறவியை மையமாக வைத்து எடுத்த திரைப்படங்களான நண்பகல் நேரத்து மயக்கம், சியாம் சிங்கா ராய், அனேகன், சைத்தான், அருந்ததி, சடுகுடுவண்டி, நெஞ்சம் மறப்பதில்லை உள்ளிட்டவை மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இது இன்றைய காலத்திலும் மக்களிடையே மறுபிறவியின்மேல் நம்பிக்கை உள்ளது என்பதையே காட்டுகிறது. ஆனால் பலர் நிஜ வாழ்க்கையிலும் இதை நம்புகிறார்கள். சில உண்மையும் கூட.
அதுபோல் சமீபத்தில் நடைபெற்ற மறுபிறவி கதைதான் இது...!
உத்தரபிரதேச மாநிலம் மைன்புரி ஜாகிரின் ரத்தன்பூரைச் சேர்ந்த மனோஜ் மிஸ்ரா ஜனவரி 9, 2015 அன்று தனது வயலில் வேலை செய்து கொண்டிருந்தபோது, பாம்பு கடித்துள்ளது. அதன் பிறகு அவர் பார்வை இழந்தார். குடும்பத்தினர் அவரை மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், ஆனால் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
அப்போது அவரது மகள் ரஞ்சனா கர்ப்பமாக இருந்தார். மனோஜ் மிஸ்ரா இறந்து 20 நாட்களுக்குப் பிறகு ரஞ்சனாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு ஆர்யன் என்று பெயரிட்டனர்.
ஆர்யன் தனது 4 வயதில் தனது தாயிடம் நீ என் தாய் அல்ல என்று அடிக்கடி கூறுவார். கடைசியாக மைன்புரிக்கு வந்ததும் பாட்டியை பெயர் சொல்லி கூப்பிட்டு உள்ளார்.
அவரது தாய் பாட்டியின் பாதங்களை தொட்டு வணங்குமாறு கூறியுள்ளார். கோபமடைந்த சிறுவன் அவர் என் மனைவி, என் பாட்டி அல்ல என்று கூறி உள்ளார்.அம்மாவை மகள் என்றும், அண்ணனை மகன் என்றும் அழைக்க ஆரம்பித்தார்.
அவர் தன்னை 8 ஆண்டுகளுக்கு முன்பு பாம்பு கடித்து இறந்த மனோஜ் மிஸ்ரா என்று கூறிக்கொண்டார்.தான் தாத்தாவின் மறு அவதாரம் என்று கூறி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.
மக்கள் கேள்விகளைக் கேட்கிறார்கள். சிறுவன் அனைத்து கேள்விகளுக்கும் பதிலளித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளான்.
குறிப்பாக தனது தாத்தாவின் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்ட பணம் குறித்து ஆர்யன் கூறியது மக்களை மேலும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.
இந்து மற்றும் புத்த மதங்கள் மறுபிறப்பை நம்புகின்றன். கிறித்துவம் மற்றும் இஸ்லாம் மறுபிறப்பை மறுக்கின்றன
மருத்துவர் ஸ்டீவென்சன் உலகில் பல இடங்களில் குழந்தைகள் முந்தைய பிறவி பற்றிப் பேசுவதைக் கேள்விப்பட்டார். அத்தகைய குழந்தைகளின் தகவல்களைச் சேகரிக்க ஆரம்பித்தார். அவ்வாறு பேசுபவர்களை உலகம் முழுவதும் சுமார் 3,000 பேரைக் கண்டறிந்தார். இந்தியா, பர்மா, இலங்கை, மற்றும் பிரான்ஸ் என நாடு நாடாகச் சுற்றி மறுபிறப்பு பற்றி ஆராய்ச்சி செய்தார்.
அவர் கண்டறிந்தது என்னவென்றால், இந்த 3,000 பேரில் இரண்டு வயது முதல் ஆறு வயதுக் குழந்தைகளே இந்த பூர்வஜென்ம அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். இத்தகைய குழந்தைகள் சராசரிக்கும் அதிகமான புத்திசாலிகளாக இருப்பதையும் கண்டறிந்தார்.
பெரியவர்கள் யாரும் இதுமாதிரி பூர்வ ஜென்மத்தைப் பற்றிப் பேசவில்லை. இந்த குழந்தைகளின் கூற்றுப்படி முந்தைய பிறவியில் இவர்களில் 70 சதவிகிதத்தினர் அகால மரணமடைந்தவர்கள். மேலும் இவர்களில் 90 சதவீதத்தினர் முற்பிறவியில் ஆணாக இருந்தால் ஆணாகவும், பெண்ணாக இருந்திருந்தால் பெண்ணாகவும்தான் மறுபிறவி எடுக்கின்றனர்.
மேலும் சில குழந்தைகளின் உடலில் முற்பிறவியிலிருந்த மச்சங்கள் மற்றும் தழும்புகளையும் ஸ்டீவென்சன் கண்டறிந்தது வியப்பாகத்தான் உள்ளது.
மறுபிறப்பைப் பேசும் இந்த குழந்தைகளில் 60 சதவிகிதத்தினர் மறுபிறப்பை நம்பும் மதத்தைச் சார்ந்த குடும்பத்தில் பிறந்தவர்கள். மீதமுள்ள 40 சதவிகிதத்தினர் மறுபிறப்பை மறுக்கும் மதத்தைச் சார்ந்த குடும்பத்தில் பிறந்தவர்கள்.
சுமார் 34 ஆண்டுக் காலம் ஸ்டீவென்சன் தேடி கண்டறிந்த மறுபிறவி நிகழ்வுகள் மொத்தம் 225 ஆகும். இவைகளை மறுபிறப்பு உயிரியல் என்ற 2,268 பக்கங்கள் கொண்ட இரு புத்தகங்களில் விவரித்துள்ளார்.
மக்களின் நம்பிக்கையும் மருத்துவர் ஸ்டீவென்சனின் ஆராய்ச்சி முடிவும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகத்தான் உள்ளது.