< Back
தேசிய செய்திகள்
உ.பி: அதிகாரிகள் புறக்கணிப்பு, விரக்தியில் பதவியை விலக முன் வந்த மந்திரியால் பரபரப்பு
தேசிய செய்திகள்

உ.பி: அதிகாரிகள் புறக்கணிப்பு, விரக்தியில் பதவியை விலக முன் வந்த மந்திரியால் பரபரப்பு

தினத்தந்தி
|
20 July 2022 4:51 PM IST

உத்தரப் பிரதேசத்தில் மந்திரி தினேஷ் காடிக் தனது பதவியை ராஜினாமா செய்வதாக கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

லக்னோ,

உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் அமைச்சரவையில் ஜல்சக்தி துறை இணை மந்திரியாக உள்ள தினேஷ் காடிக் தனது பதவியை ராஜினாமா செய்வதாக கூறினார். மேலும் அவர் தரப்பில் கூறுகையில், சில உயர் அதிகாரிகள் என்னை புறக்கணிக்கப்படுவதால் இந்த முடிவு எடுத்து உள்ளதாகவும்,

இதனை மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவுக்கு கடிதம் மூலம் ராஜினாமா கடிதத்தைஅனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ராஜினாமா செய்வதாக எழுதிய கடிதம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அவரது சொந்த ஊரான மீரட் மாவட்டத்தில் உள்ள ஊடகங்கள் அவரது ராஜினாமா குறித்து அவரது பதிலைக் கேட்டபோது, ​​"அப்படி ஒரு பிரச்சினை இல்லை" என்று காதிக் கூறியதாக கூறப்பட்டது. அது ஒரு வதந்தி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் டெல்லி சென்றுள்ளதாக மீரட்டில் உள்ள மந்திரிக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.

மேலும் செய்திகள்