< Back
தேசிய செய்திகள்
மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் 3 வயது மகனை கொன்ற கொடூர தந்தை
தேசிய செய்திகள்

மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் 3 வயது மகனை கொன்ற கொடூர தந்தை

தினத்தந்தி
|
27 Jan 2023 10:50 AM IST

மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் 3 வயது மகனை தந்தை கொடூரமாக கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பதேபூர்,

உத்தரப்பிரதேச மாநிலத்தில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் 3 வயது மகனை கோடரியால் வெட்டி கொடூரமாக கொலை செய்த தந்தையை போலீசார் கைது செய்தனர்.

ஹுசைங்கஞ்ச் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிட்டிசாபூர் கிராமத்தைச் சேர்ந்த நபர் சந்திரகிஷோர் லோதி. இவரது 3 வயது மகன் ராஜ். இந்த நிலையில் புதன்கிழமை இரவு, குடிபோதையில் தனது மனைவியுடன் தகராறு செய்த சந்திரகிஷோர், ஆத்திரத்தில் தனது மகனை கோடரியால் வெட்டி கொடூரமாக கொலை செய்து, உடலை விவசாய வயலில் புதைத்துள்ளார்.

இதுகுறித்து அவரது மனைவி அளித்த புகாரின் பேரில், சந்திரகிஷோரை கைது செய்த போலீசார், சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் செய்திகள்