உ.பி.யில் பிரதமர் மோடி மற்றும் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்தை ஆதரித்த தனது மனைவிக்கு முத்தலாக் கொடுத்த கணவர்!
|பிரதமர் மோடி மற்றும் யோகி ஆதித்யநாத்தை தனது மனைவி ஆதரித்ததற்காக உத்தரபிரதேசத்தில் ஒருவர் தனது மனைவிக்கு முத்தலாக் கொடுத்துள்ளார்.
லக்னோ,
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்தை தனது மனைவி ஆதரித்ததற்காக உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத் மாவட்டத்தில் ஒருவர் தனது மனைவிக்கு முத்தலாக் கொடுத்துள்ளார்.
பிரதமர் மோடி மற்றும் யோகி ஆதித்யநாத்க்கு வாக்களித்ததால், தனது கணவர் மற்றும் மாமியார் கொடுமைப்படுத்தியதாக அந்த பாதிக்கப்பட்ட பெண், போலீசாரிடம் குற்றம் சாட்டியுள்ளார் என போலீசார் தெரிவித்தனர்.
ஷானா இராம் என்ற பாதிக்கப்பட்ட பெண், முகமது நதீமை 2019 டிசம்பரில் திருமணம் செய்தார். இந்நிலையில் முத்தலாக் சொல்லிவிட்டு, தன்னை வீட்டை விட்டு வெளியேறும்படி தனது கணவர் கூறினார் என குற்றம் சாட்டியுள்ளார்.
குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று காவல்துறை கண்காணிப்பாளர் அகிலேஷ் படோரியா கூறினார்.
பாதிக்கப்பட்ட பெண் மார்ச் 3 ஆம் தேதி எப்ஐஆர் பதிவு செய்திருந்தாலும், போலீசார் இப்போது தான் இந்த விவகாரம் குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.