< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
திருமண ஆசை காட்டி சிறுமியை 2 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்த நபர் கைது
|5 Dec 2022 9:13 AM IST
கடந்த இரண்டு ஆண்டுகளாக தன்னை உடல் ரீதியாக துன்புறுத்தியதாக பாதிக்கப்பட்ட சிறுமி போலீசாரிடம் கூறினார்.
லக்னோ.
உத்தரபிரதேச மாநிலம் சுல்தான்பூரில் திருமணத்தை காரணம் காட்டி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
முதுகலை பட்டப்படிப்பு படிக்கும் அந்த நபர், சிறுமி ஒருவரை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடந்த இரண்டு ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால், உடலளவில் பாதிக்கப்பட்ட சிறுமி, போலீசில் புகார் அளித்தார்.
அதில், என்னிடம் அத்துமீறலில் ஈடுபட்ட நபர் தன்னை தனது மனைவி என்று அழைப்பதாகவும், இரண்டு ஆண்டுகளாக தன்னை உடல் ரீதியாக துன்புறுத்தியதாகவும் அவர் போலீசாரிடம் கூறினார்.
பாதிக்கப்பட்ட சிறுமியின் புகாரின் பேரில், குழந்தைகள் பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாப்பு (போக்சோ) சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளியை கைது செய்தனர்.