< Back
தேசிய செய்திகள்
குழந்தையை அடித்ததால் கோபத்தில் மனைவியை கொன்ற கணவன்
தேசிய செய்திகள்

குழந்தையை அடித்ததால் கோபத்தில் மனைவியை கொன்ற கணவன்

தினத்தந்தி
|
30 March 2023 1:07 AM IST

குழந்தையை அடித்ததால் கோபத்தில் மனைவியை கொன்ற கணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.

முசாபர் நகர்,

உத்தரபிரதேச மாநிலத்தில் குழந்தையை அடித்ததால் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் அவரை கணவன் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முசாபர்நகர் மாவட்டத்தில் உள்ள ரத்தன்புரி கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

முன்னதாக செவ்வாய்க்கிழமை நர்கிஸ் என்ற பெண் அவர்களது குழந்தையை அடித்துள்ளார். இது தொடர்பாக அவருக்கும் அவரது கணவர் நயீம் அலிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஆத்திரத்தில் நயீம் அலி நர்கிசை கழுத்தை நெரித்து கொன்றுள்ளார்.

இந்த நிலையில் இதுகுறித்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து நயீம் அலியை கைது செய்துள்ளனர். நர்கிசின் உடல் மீட்கப்பட்டு தடயவியல் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்