< Back
தேசிய செய்திகள்
சைக்கிளில் சென்ற மாணவியின் துப்பட்டாவை பிடித்து இழுத்த இளைஞர்கள் - கீழே விழுந்த மாணவி பைக் மோதி உயிரிழப்பு
தேசிய செய்திகள்

சைக்கிளில் சென்ற மாணவியின் துப்பட்டாவை பிடித்து இழுத்த இளைஞர்கள் - கீழே விழுந்த மாணவி பைக் மோதி உயிரிழப்பு

தினத்தந்தி
|
17 Sept 2023 7:12 PM IST

உத்தர பிரதேசத்தில் சைக்கிளில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவியின் துப்பட்டாவை பைக்கில் சென்ற இருவர் இழுத்ததில் கீழே விழுந்த மாணவி பின்னால் வந்த பைக் மோதி உயிரிழந்தார்.

அம்பேத்கர் நகர்,

உத்தர பிரதேசம் மாநிலம் அம்பேத்கர் நகரில் 17 வயது பள்ளி மாணவி ஒருவர் பள்ளியிலிருந்து சைக்கிளில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த இருவர், மாணவியின் துப்பட்டாவை பிடித்து இழுத்தனர். இதனால் தடுமாறி கீழே விழுந்த மாணவி மீது பின்னால் வந்த பைக் மோதியது. இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதில் மாணவி உயிரிழந்தார்.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் மாணவியின் துப்பட்டாவை பிடித்து இழுத்த ஷாபாஸ், அர்பாஸ் மற்றும் மாணவி மீது பைக்கால் மோதிய பைசல் ஆகிய 3 பேரை நேற்று கைது செய்தனர்.

இந்த நிலையில் குற்றம் சாட்டப்பட்ட மூவரும் இன்று மருத்துவப் பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்டபோது, போலீசாரின் துப்பாக்கியைப் பறித்துக்கொண்டு தப்பிச் செல்ல முயன்றதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் மூவரும் காயமடைந்தனர். தற்போது அவர்கள் மூவரும் மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்