< Back
தேசிய செய்திகள்
உ.பி.: தொழிற்சாலையில் வெடிவிபத்து; 4 பேர் பலி, 6 பேர் படுகாயம்
தேசிய செய்திகள்

உ.பி.: தொழிற்சாலையில் வெடிவிபத்து; 4 பேர் பலி, 6 பேர் படுகாயம்

தினத்தந்தி
|
17 Sept 2024 5:56 AM IST

உத்தர பிரதேசத்தில் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி 3 வயது சிறுமி, ஒரு பெண் உள்பட 4 பேர் பலியானார்கள். 6 பேர் படுகாயமடைந்து உள்ளனர்.

பிரோசாபாத்,

உத்தர பிரதேசத்தின் பிரோசாபாத் மாவட்டத்தில் ஷிகோகாபாத் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட நவ்ஷெரா பகுதியில் குடியிருப்புவாசிகள் அதிகம் வசிக்கும் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் பட்டாசு ஆலை குடோன் மற்றும் தொழிற்சாலை அமைக்கப்பட்டு செயல்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில், இந்த ஆலையில் நேற்றிரவு திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் 3 வயது சிறுமி, ஒரு பெண் உள்பட 4 பேர் பலியானார்கள். 6 பேர் படுகாயமடைந்து உள்ளனர். அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.

இதுபற்றி ஆக்ரா ஐ.ஜி. தீபக் கூறும்போது, மொத்தம் 10 பேர் மீட்கப்பட்டனர். அவர்களில் 4 பேர் உயிரிழந்து விட்டனர். இடிபாடுகளில் வேறு சிலரும் சிக்கியிருக்க கூடும். தீயணைப்பு மற்றும் காவல் துறையினர், மாவட்ட நிர்வாகத்தினருடன் இணைந்து நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகின்றனர் என கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்