< Back
தேசிய செய்திகள்
2 உஸ்பெகிஸ்தான் பெண்களுக்கு 2 ஆண்டு சிறை - உத்தரபிரதேச கோர்ட்டு தீர்ப்பு

கோப்புப்படம்

தேசிய செய்திகள்

2 உஸ்பெகிஸ்தான் பெண்களுக்கு 2 ஆண்டு சிறை - உத்தரபிரதேச கோர்ட்டு தீர்ப்பு

தினத்தந்தி
|
6 April 2023 8:47 PM GMT

சட்ட விரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த 2 உஸ்பெகிஸ்தான் பெண்களுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரபிரதேச கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது.

மகராஜ்கஞ்ச்,

உஸ்பெகிஸ்தானை சேர்ந்த ரக்சனா சுல்தானோவா (வயது 38), எமினோவா மெவ்லுடா (40) ஆகிய 2 பெண்கள் நேபாளம் வழியாக உத்தரபிரதேசத்தின் மகராஜ்கஞ்ச் மாவட்டத்தின் பகவன்பூர் வந்தனர். அவர்கள் கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் கைது செய்யப்பட்டனர்.

அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்த கோரக்பூரை சேர்ந்த ஷா ஆலம் ஷேக், சம்சுதின் கான் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் 4 பேரும் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர்.

அவர்கள் மீதான வழக்கை விசாரித்த சிறப்பு நீதிபதி பவன்குமார் ஸ்ரீவத்சவா, 4 பேருக்கும் தலா 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நேற்று தீர்ப்பு வழங்கினார். மேலும் தலா ரூ.20 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்