< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
நடிகை ஜெயப்பிரதாவுக்கு பிடிவாரண்டு - உத்தரபிரதேச கோர்ட்டு உத்தரவு
|22 Dec 2022 7:38 AM IST
நடிகை ஜெயப்பிரதாவுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரபிரதேச கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
ரேபரேலி,
உத்தரபிரதேச மாநிலம் ராம்பூர் நாடாளுமன்ற தொகுதியில் கடந்த 2019-ம் ஆண்டு பா.ஜ.க. சார்பில் நடிகை ஜெயப்பிரதா போட்டியிட்டார். ஆனால் எதிர்த்து போட்டியிட்ட சமாஜ்வாடி வேட்பாளர் அசம்கான் வெற்றி பெற்றார்.
ஜெயப்பிரதா தேர்தல் பிரசாரத்தின்போது தேர்தல் விதிமுறைகளை மீறியதாக 2 போலீஸ் நிலையங்களில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்குகள் எம்.பி. எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் நடந்து வருகிறது.
இதற்கிடையே வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த நிலையில் ஜெயப்பிரதா ஆஜராகவில்லை. இதனையடுத்து அவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டு பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார்.